நோக்கம்
- தமிழ்மொழியின் வாயிலாக தமிழ் இலக்கியத்தின் வரலாறு தொடர்பான செய்திகளை வழங்குதல்.
- தமிழ்இலக்கியத்தின் மூலம் பண்டைய தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை, அகப்புற ஒழுக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தல்.
- பிறமொழிப் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் இலக்கிய வளமையையும் எடுத்துரைத்தல்.
- தமிழ்மொழியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் ஆளுமை தன்மைகளை ஊக்குவித்தல்.
குறிக்கோள்
- சங்க இலக்கியத்தில் காணப்பபெறும் வாழ்வியல் சிந்தனைகளை அறிந்து கொள்வர்.
- அற இலக்கியம் மற்றும் தமிழ் காப்பியங்களின் வாழ்வியல் சிந்தனையைப் பெறுவர்.
- பக்தி இலக்கியங்களைக் கற்பதன் மூலம் பக்தி நெறியினையும், பகுத்தறிவு இலக்கியங்களைக் கற்பதன் வழி நல்லிணக்கத்தையும் தெரிந்துகொள்வர்.
- மொழி அறிவோடு சிந்தனைத் திறனைப் பெறுவர்.
- மொழிப்பயிற்சிக்குத் தேவையான இலக்கணங்களைக் கற்பர்.