தினம் ஒரு குறள் அறிமுகம்
தமிழாய்வுத்துறை மாணவர்களின் அறநெறி, மற்றும் ஒழுக்கம் மேம்பாடு மொழித்திறன் வளர்ச்சி சிறந்த படிப்பறிவு வாழ்க்கைக்கான நல்ல நெறிகளை மேம்படுத்தும் நோக்கில், “தினம் ஒரு குறள்”என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அறநெறி மற்றும் ஒழுக்க மேம்பாடு போன்றவற்றை அறிந்து கொள்வர். தினமும் ஒரு குறலை கற்பதன் மூலம் மாணவர்கள் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்லொழுக்கப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்றனர். இந்நடைமுறையானது மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்துகிறது. மாணவர்களின் சொல்வளத்தையும் கவிதை நடையையும் வளர்க்க உதவுகிறது. திருக்குறள் கல்வியின் முக்கியத்துவம் கல்வி கற்பதன் நோக்கம் போன்றவற்றை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு குறலும் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இது ஒரு நல்ல கல்வி முறைக்கான வழிகாட்டியாகவும் அமைகிறது .